Tuesday, September 8, 2009

பத்தாயிரம் வாசகர் பார்வைகள்

பத்தாயிரம் வாசகர் பார்வைகள் வரப்போகுது! நண்பர் விஜயஷங்கர் சொல்லி விளையாட்டாக இந்த வலைப்பூ ஆரம்பித்தேன். இப்போது நிறைய பேர் படிக்கிறார்கள். எழுதுவதற்கு ( என் தாய்மொழி இல்லாவிட்டாலும் ) நிறைய விசயம் உண்டு இங்கு. இன்னொரு நண்பர் சுந்தரவடிவேலுவும் அவர் ஊக்கம் கொடுத்து எழுத வைக்கிறார்!

ஒரு புதுவை பதிவர், என் மனதை புண் படுத்தியமாதிரிஇருந்தது. அவரும் மன்னிப்பு மெயில் போட்டுள்ளார். தேங்க்ஸ். மறப்போம் மன்னிப்போம்.

***

நூற்றி முப்பது பதிவுகளில், ஒரே ஒரு கதை, அதுவும் சொதப்பல். அதோடு நின்றது கதை எழுத்துப்பயணம். ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினேன். பரிதாபம்!

கவிதை இன்னொன்று இங்கே...

பத்தாயிரம் பார்வைகள் வந்தன
பரவசம் அடைந்தேன்
நிலாச்சோறு கிடைக்குமா என்றிருந்தேன்
பவுர்ணமி வந்தது
அம்மா இல்லாத ஏக்கம்
பாசம் கிடைக்காது துக்கம்
வருகிறாள் புது மனைவி!

அப்புறம் இந்த மாதிரி ( அதிஷாவின் கவிதை ) எனக்கு வராது!

நீல நிற இரவுகளில்!

***

நான் படித்த கோவை கல்லூரி நண்பர்கள் ( முற்றிலும் சீனியர்கள் ) ட்விட்டரில் இருக்கிறார்கள்... வெண்பா, அது இது என்று தூள் கிளப்புறாங்கையா! நானும் தான் ட்விட்டர் பண்ணுறேன்.

***

வேலை விசயமாக இந்த வார கடைசியில் நியூ யார்க் பயணம் - ஒரு வாரம் - ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பனிக்கு சாப்ட்வேர் வேலை இருக்கு. நாளை அமெரிக்கன் விசா வாங்க சென்னை செல்கிறேன். பயம் தகிடதோம் போடுது. சுவையின் ப்ளு வேறே ஆட்டம் காட்டுது!

அப்துல்லா அண்ணன் பதிவில் பார்த்த விஷயம் மனதில் கொண்டு மேலும் வினிதாவின் பதிவில் கண்ட விஷயங்கள் மனதில் கொண்டு, தயார் செய்து வேண்டுகிறேன்.

காசே தான் கடவுளடா

All about USA visa

கடைசியில் எங்கள் கம்பெனிக்கு நல்லது நடந்தால் சரி.

எனக்கும் தான்! :-)

4 comments:

  1. உங்களை கூகுளினால் அடைந்தேன். உங்கள் பத்தி எழுத்து வேகமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக எழுதிக்கொண்டேயிருங்கள். :)வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. டோண்ட் ஒர்ரி உங்களுக்கு கம்பெனி சார்பாக செல்வதால் கட்டாயம் கிடைக்கும். நல் பயணத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete