Thursday, June 18, 2009

தூரம் கொஞ்சம் தான்

நாங்கள் வேலை செய்யும் ஆபிஸ் இருப்பது கொஞ்சம் தூரம் தான்.

ஆம்ஸ்டேர்டம்....

ஹோட்டலில் இருந்து நேற்று சாயந்திரம், ஒரு சிறு வீட்டிற்கு இடம் மாறினோம். பெனுலக்ச்பான் என்ற இடம். பென்ஸ் என்கிறார்கள். அப்பாடா கொஞ்சம் இடம் உள்ளது... முதல் மாடி வீடு. வேலை இடத்திற்கு செல்ல ( 5.5 km ) என்ன பஸ் பிடிக்க வேண்டும், தினமும். பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால் எல்லாம் கிடைக்கிறது.... இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், அரபிகள் இந்த ஏரியாவில் இருக்கிறார்கள்.

முதலில் அரிசி வாங்கி, சமைத்து.... தயிர் ஊறுகாய் வைத்து சாப்பிட்டோம்! வெளியே விலை மிகவும் அதிகம். இங்கு லன்ச் என்பது ஸ்னேக் மாதிரி, கொஞ்சமா சாப்பிடுகிறார்கள். ஒரு சாண்ட்விச் தான்! அப்புறம் நொறுக்ஸ்.... ஜூஸ். அது நமக்கு கட்டுபடி ( பில்லிங்.. ) ஆகாது. விலையும் கூட!

இங்கு மெயின் ஏரியாவில், கேசரி கொடுக்கிறார்கள் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஆட்கள். டொனேசன் கட்டாயம் கேட்கிறார்கள். எல்லாம் போதையில் அருகில் படுத்து கிடக்கிறார்கள்.

போலீஸ சைக்கிளில் செல்கிறார்கள். இங்கு தொழில் டூரிசம், செக்ஸ் விற்பனை.. ட்ரக்ஸ் பற்றி யாரும் கண்டுக்கொள்வதில்லை. விற்றால் தான் கேசாம். அடித்தால் தவறில்லை என்றார் லோகல் ஒருவர்!

கிரிகெட் பற்றி கொஞ்சம் தெரிந்துள்ளது இங்குள்ளவர்களுக்கு. ஹாலந்து டீம், டி-௨0 வேர்ல்ட் கப்பில் ஆடியதை கவனிக்கிறார்கள். இந்திய தோற்றத்தை பார்த்து உச்சு கொட்டுகிறார்கள். ஒன்று கவனித்தேன், பூட்பால் மாதிரி கிரிக்கெட் மீது இங்கு மோகம் இல்லை. இங்க்லேண்டிலும் அப்படித்தானாம்!

சனி ஞாயிறு லண்டன் செல்லலாம் என்றால், இங்கு வந்த விசா செல்லாது. செங்கண் விசா லண்டனுக்கு பயன்படாது. ஆனாலும் அவர்கள் யுரோ உனியனில்... கண்செலேட்டை கொஞ்சம் நேரம் முன் அழைத்துப்பார்த்தேன், ஒரு இந்தியர் தான் பேசினார். இந்தியாவில் தான் விசா வாங்க வேண்டும் என்றார். ( என்ன கொடுமை இது? )

அறை மணி நேரம் ப்ளைட் தான் இங்கிருந்து. அதற்கு போக, இந்தியா ( பத்து மணி நேரம் ) சென்று விசா வாங்குவதா?

நானும் ரவியும், இந்த ஏரியாவை, வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை சல்லடை போட்டு, ஊர் சுற்ற முடிவு செய்துள்ளோம்.

நேற்றிரவு, கடைக்கு ( மால் ) போன சமயம், சில ஸ்ரீலங்கன்சை பார்த்தேன்! ஹோட்டல் தவிர எட்டு மணிக்கு எல்லாம் மூடிவிடுகிறார்கள், சட்டமாம்!

ஆமாம், ஒரு இந்தியனை பார்த்தால், இன்னொருவர் ஏன் முகம் திருப்பி செல்கிறார்கள்? ( என் வேலையை கெடுக்க இன்னொருவன் இங்கு வந்துவிட்டான் என்றா? )

****

வீடு இரண்டு பெட்ரூம், இரண்டு டாய்லேட் ( அது ஒரு வித்தியாசம், இங்கு! ). ஒரு வாரம் ஹோட்டல் சார்ஜிர்க்கு, ஒரு மாதம் வீடு! ;-)

அம்ச்டேல்வீன் என்ற இடத்தில் இருக்கும், ஆபிசிலிருந்து, சுமார், பதினைந்து நிமிடத்தில் ... பெனுலக்ச்பான். மிஸ்சிசிப்பி என்ற தெரு... கூகிள் மேப்சிலும் வருது... தூரம் கொஞ்சம் தான்



View Larger Map

No comments:

Post a Comment