இது எனது நூறாவது பதிவு. இங்கு வேலையில் ரொம்ப பிசி என்பதால், ஒரு சிறு பதிவு.... மாத்திரம்.
தலைப்பு ஏன் "பணம் பண்ணும் வித்தை"?
நாங்கள் நாடோடிகளாக ஏன் வெளிநாடுகளுக்கு வந்திருக்கிறோம் என்பதை பற்றி யோசித்தேன்.
ஒரு மிக பெரிய நிறுவனம் ( இன்போசிஸ் ) செய்ய முடியாத வேலையை, எங்கள் நிறுவனம் , பத்தில் ஒரு பங்கு காசில் அதே நேரத்தில் செய்துகொடுக்கிறோம். ஆனந்தம். எவ்வளவு படிப்பினை.
எப்படி தான், கஸ்டமர்களை, ஏமாற்றி இப்படி கொள்ளை அடிக்கிறார்கள்?
கஷ்டகாலம்... பணம் பண்ண?
********
சரி இங்கு ஆம்ச்டேர்டேமில் லைவ் சோஸ் எனப்படும் அனைவர் முன் செக்ஸ் ஆட்டம் நடக்கிறது. தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு ஜோடிகள் மெல்லிசை முழங்க, உறவில் ஈடுபடுகிறார்கள். "உவ்வே" என்று தான் சொல்ல தோன்றுகிறது. எனக்கு முதல் முறை நேரில் பார்ப்பதால் (டிவி வேறுங்க!) ஒரு வித மன குறுகுறுப்பு இருந்தது! பார்வையாளர்களில் நிறைய இந்தியர்களை பார்த்தேன். வெளிநாட்டு சுற்றுலாவிற்கு வருபவர்களுக்காக இப்படி நடக்கிறது. ஆண்கள், பெண்கள் என சமமாக வந்து பார்க்கிறார்கள். முப்பதோ நாற்பதோ யூரோக்கள் வாங்குகிறார்கள், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கு இருக்கலாம்!
இதுவும் பணம் பண்ண.
*********
இங்கு டச் மக்கள், ரொம்பவும் நேரடியாக ( ஸ்ட்ரெயிட் பார்வர்ட் ) பேசுகிறார்கள். அது தான் வேண்டும். உறவுகள் பலப்படும். வியாபாரம், தொழில் நன்றாக நடக்கும்.
இதுவும் நல்லபடியாக பணம் பண்ண.
*********
இங்கு மதுரடேம், ரோட்டர்டேம் என்ற இடங்கள், அருகில் இருக்கின்றன, இரண்டு வீக்கேண்டுகளில் சுற்றினோம். அந்நியன் மற்றும் சில ட்டேளுகு படங்களில் பார்த்த இடங்கள். இப்போ டுலிப்ஸ் இல்லை, மேவோடு முடிகிறது! நல்ல பார்க்குகள், மிநியேசர் சித்திகள் என பொழுதுபோக்கு அம்சங்கள் உண்டு. யுற்றேக்ட் உனிவேர்சிட்டி பார்த்தோம். நிறைய இந்தியர்கள் படிக்கிறார்கள், இலவசமாக!
எதற்கு வெளிநாட்டில் படிப்பு?
இதுவும் கல்வியால் பணம் பண்ண.
********
நானும் நண்பர் ரவியும் இரண்டு சைக்கிள் வாங்கியுள்ளோம். பழையது. பஸ் சார்ஜ் கட்டுப்படி ஆகவில்லை! தினமும் ஆபிசுக்கு சைக்கிளில்... ஐந்து கிலோமீட்டர், ஒரே நேர் சீர் பாதை! ஜாலியாக இருக்கு.
எதற்கு?
ஹும்.. பணம் பண்ண!
********
எங்கள் கம்பெனியில் இருந்து ஒருவர் வரவேண்டியது டிலே ஆகிறது. ஜெர்மன் கிரீன் கார்ட் இப்போ கொஞ்சம் லேட். அதனால் நான் இன்னும் ஒரு மாதம் இங்கு இருக்க வேண்டும்.
சரி சரி "பணம் பண்ண" தான் இங்கு இருக்க வேண்டும்!
No comments:
Post a Comment