Friday, August 14, 2009

வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள்

எங்கள் ஊர் வீட்டுக்கு ஒரு முறை வந்த ஒரு சாமியார் ( குரு ) வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள் தேவை என்று சொன்னார்.

* சுற்றம்
* பணம்
* ஆன்மீகம்

எதற்கு என்று கேட்டேன். வயது வரும் போது உனக்கே தெரியும் என்று சொன்னார்.

நிறைய சுவாமிகளிடம் கேட்டேன், விளக்கம் இல்லை.

இன்று அந்த சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து மிகவும் நல்ல முறையில் இருக்கிறார் ( ஆன்மீகம்? ). நல்ல பெரிய இடது சீடர்கள் ( சுற்றம்? ) மட்டும் பணம் (?) கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எந்த தியான வகுப்புக்கும் ரூபாய் ஆயிரம், ஐந்தாயிரம் , ஐம்பதாயிரம், மூன்று லட்சம் என்று வாங்கி ( டாலர்களிலும் கொடுக்கிறார்கள்... ) ஆசிரம சேவைகளை அருமையாக செய்கிறார்.

போலீசாருக்கு மத்திய உணவு அளிக்கிறார். இலவச தியான வகுப்பு கொடுக்கிறார். (?) தினமும் ஒரு இருநூறு பேர் அங்கு இலவசமாக சாப்பிடுறாங்க!

இந்த பவுர்ணமி அன்று அங்கு ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன், என்னை கண்டுக்கொண்டார். சிறிது நேரம் பேசினார். அப்பா மறைவு பற்றி வருத்தம் தெரிவித்தார். அப்பாவின் குரு ( விசிறி சாமியார் ) தான் அவருக்கும் குரு. ஞானம் கொடுத்தவர். எல்லாம் கஷ்டமும் வாழ்க்கைக்கு படிப்பினை என்றார்.

அப்போது ஒருவர் வந்து ஒரு கிலோ எடையில் தங்கத்தில் செய்யப்பட உருத்திராட்சம் மாலை அணிவித்தார். என்னே பக்தி. ஸ்வாமிகள் என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். ஆயிரம் அர்த்தங்கள்!

நான் என் வண்டியில் ஆசிரம உள்ளே வரை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் விடுகிறார்கள். எல்லாம் அவரை தெரிந்ததால் தான்! மற்றவர்கள் எல்லாம், வெளியே தான் வண்டியை நிறுத்தி உள்ளே செல்ல வேண்டும். ( சாமியார்களிடதிலும் ஏற்ற தாழ்வு, சூது வாது உண்டா? )

எனது ஆந்திர முஸ்லீம் நண்பர் ஒருவரும் அவரிடம் தியான வகுப்பு படித்தவர். ஒரு பவுர்ணமியில் வரம் வாங்கினார், நல்ல பெண் அமைய. இன்று அவருக்கு ஹைதரபாத் நிஜாம் குடும்பத்தில் இருந்து சம்பந்தம் அவர்கள் எதிர்பார்க்காத மாதிரி வந்துள்ளது. ஆன்மீகத்தில் மதம் கிடையாது என்பது நிரூபணம் ஆயிற்று போல. (!)

+++++++++++++

சரி நான் கண்டுகொண்டது என்ன?

ஆன்மீகம் - வாழ்க்கையை சந்தோசமாக அணுக, நல்ல சுற்றமும், பணமும் இருந்தால்

சுற்றம் = உறவினர்கள் மற்றும் நண்பர்கள் - காசு இருந்தால் தான் எல்லாம்.

பணம் = சுற்றம் மற்றும் ஆன்மீகத்திற்கு இது மிகவும் அவசியம்.

எல்லாமே ஒரு லூப் தான்.

தன் கையே தனக்குதவி.

Wednesday, August 12, 2009

அழகர் மலை பாடல்

இளையராஜாவின் மூசிக்கில் அழகர் மலை பாடல்


திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆண்களின் தொண்டை மேடு ( லிங்கம் ) என்று அறிகிறேன்!

திருவண்ணாமலையில் நடந்தவை, மகத்துவம்!

முதல் உதயம் புராணம், என்று சொல்வதாக நிகழ்வு.

முதல் உயிரும் பரிணாம வளர்ச்சியும், அங்கு நிகழ்ந்ததாக சொன்னதாக நினைவு.

முதல் அரிசியும் திருவண்ணாமலை அருகில் தான் பயிரிடபட்டதாம்...

ஆமாம், ஏன் லிங்கத்தைஆண் குறியில் நினைத்து ஒட்டவைத்து பார்க்கிறார்கள்...

கதை இப்படி போகிறதாம்... நண்பர் கூறினார்...

சிவபுராணம், பார்வதியின் காமம், ராட்சசவதம், ராமேஸ்வரம், ஆண் குறி விழுந்த பகுதி, பிறகு பார்வதி செய்த பூஜை, கிடைக்கிறது சிவ பலம!

Monday, August 10, 2009

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை

இந்த பதிவை படியுங்கள்.

உரையாடல் போட்டியும் என் கதையும்

அப்புறம் அங்கு குறிப்பிட்ட முடிவுகள் ப்ளாகில் நடந்த பின்னூட்ட சம்பாசனை பாருங்கள். கேவலம். மனிதன் ஓபனாக ஒன்றும் பேசக்கூடாதா? இப்போ தெரியுது ஜெயமோகன், மம்மி ரிடர்ன்ஸ் எல்லாம் வருதுன்னு...

அப்புறம் சில பதிவுகளில், உண்மையான விமர்சனம் ( அவர்கள் வேண்டுமென்று கேட்டுள்ளார்கள் ) செய்தால் கூட சிலருக்கு எங்கோ சொரிகிறது!

If you do not know to categorize, and explain the castigation's, then why the f*** run a contest?

நாங்கெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்கள். ரொம்ப கஷ்டப்பட்ட ஜீவன்க. எதோ போலச்சிகிட்டு இருக்கோம். இப்போ இலக்கியம் வேறு சதுவுறோம்...

எங்கப்பா அடிக்கடி சொல்லும் வாக்கியம் ... "குட்டிது பொறப்பு அலாக!".

நான் சொல்ல விரும்பவில்லை!

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை. குடி ஒன்றும் முழுகி விடாது!

Saturday, August 8, 2009

உரையாடல் போட்டியும் என் கதையும்

என்னுடைய உன்னை கொல்ல வேண்டும் கதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பினேன்.

படித்தார்களா என்று தெரியலே?

நிச்சயம் படிச்சிருக்கமாட்டாங்க?

ஏன்னா , இங்கே படியுங்க... ( சே... என்னை செலக்ட் பண்ணலே )

"சிறுகதைப் போட்டி முடிவுகள்"

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

பரிசு ஏன், எப்படி, எதுக்குன்னு ஒரு விவரம் இல்லே?

எனக்கு பரிசு இல்லே? நிஜமாவே அழுகை வருது! முதல் முறை கதை எழுதினேன். அந்த முப்பத்தி ஏழில் இருக்கா?

( ஒரு கிண்டல் - என்ன வெற்றி பெற்ற பாதி பேர், நடுவர்களின் நண்பர்களா? சில பேர் ஏற்கனவே பதிவுலகில் பிரபலம் வேறே... என் கதையை பப்ளிஷ் பண்ணுங்க ப்ளீஸ்! )

Thursday, August 6, 2009

ஒரு நண்பரின் பதிலுரை

நான் இப்படி எழுதியதற்கு.... நண்பர் சொல்லுகிறார்

//அமெரிக்காவில் டெஸ்டிங்க் வேலை வாங்குவதும் எளிதல்ல// :-)

அப்படிதான் ஏற்கனவே அங்கு இருக்கும் நம் நண்பர்கள் சொல்லுவார்கள். அவர்கள் மனைவிமார்களை அங்கு வேலை செய்ய வைக்க இது எளிய வழி!

மற்றவர்கள் அங்கு வந்துவிட்டால் ப்ராப்ளெம். எங்களுக்கே இப்போ ரிசசென். எதுக்கு நீங்க வரீங்க?

என் ஆண் நண்பர்கள் அங்கு கல்யாணம் செய்து சென்றவுடன் மனைவிகளுக்கு ( திறமை இருந்தால் தான்.. டிகிரீ..) உடனே வேலை வாங்கி கொடுக்கிறார்கள், குறைந்த பட்சம் அறுபதாயிரம் டாலர்கள் சம்பளம்.

அப்புறம் இன்னும் ஒன்று, பே ஏரியாவில் வயர்லேச்ஸ் நெட்வர்க் ஆட்கள் தேவை என்று எவ்வளவு விளம்பரங்கள் மான்ச்டரில் இருக்கு தெரியுமா? நான் வேறு எஸ்.ஏ.பி. படித்துவிட்டேன், பெருஞ்செலவுடன். அதனால், அந்த வழியில் போகவேண்டும்.

நானும் கம்ப்யுட்டர் சாப்ட்வேர் துறையில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டேன். அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன். (என் சொந்த கருத்து தான்...திணிக்கவில்லை.. )

http://www.linkedin.com/in/rajusundaram

Link with me...

பெங்களூரும் திருவள்ளுவரும்

நான் தமிழ்நாட்டுக்காரன்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைப்பது குறித்து மகிழ்ச்சி.

சென்னையில் சர்வஞனா சிலையும் வருகிறது.

இரு மாநில முதல்வர்களும் திறக்கிறார்கள்.

சரி பெங்களூரில், ஏதாவது மொழி பிரச்சனை வேண்டும் என்று திரிந்துக்கொண்டு இருக்கும் வட்டாள் கூட்டம் நினைத்தால் பயம் தான்.

ஊர்வலத்திற்கு தடை போட்டுளார்கள். இருந்தாலும் கலவரம் வரும் அபாயம் இருக்கு.

***

அம்மாவை அழைத்து வந்த தம்பி ஞாயிறு இரவு கிளம்பிவிட்டான். அவனுக்கும் சேட்டிங் செய்த ஒரு பணக்காரி கல்யாணம் செய்துக்கொள்வது பற்றி வருத்தம். இருந்தாலும், டெக்சாசில் இருக்கும் ஒரு பெண்ணோடு, நல்ல பழக்கம் என்கிறான். ஆந்திர பெண்ணாம். ரெகார்ட் செய்த வீடியோ கூட காட்டினான். ஊர் பேர் விலாசம், பொன் நம்பர் எல்லாம் வேறு கொடுத்துள்ளாள். டிடெக்டிவ் ஆள் வைத்து விசாரிக்கலாம்! அவளும் செய்திருப்பாள். எனக்கும் இரண்டு மூன்று முறை, சில பேங்க் கிரெடிட் கார்ட் வேண்டுமா என்று கேட்டு, மொபயிலில் போன் வந்தது. குடும்ப விபரம் எல்லாம் கேட்டார்கள். ஒழுங்காக பதில் சொன்னேன். என் கம்பெனி அட்மின் அக்கவுண்ட் பாஸ்வோர்டு தவிர மற்ற எல்லா விபரம், என் கம்பெனியில் ஷேர் விபரம் உட்பட கூறினேன்! :-) பார்ப்போம்.

***

நண்பர் சரவணோடு நேற்றும் ஒரு பெண், தான் தான் இன்போசிஸ் மூர்த்தியின் மகள் அக்ஷதா என்று சேட்டிங் செய்கிறாளாம்! அவளுக்கு தெரியாது, நிஜ பெண்ணின் கல்யாண நியூஸ். அவளை மடக்க "ஒரு ப்ராப்ளம், சில லட்சங்கள் வேண்டும் என்று கேள்", என்றேன். கேட்டுள்ளான்... அதன் பிறகு சேட்டில் ஆள் காணோமாம்! எஸ்கேப்பு!

திருமண நியூஸ் பேப்பர் லின்க்ஸ் அனுப்ப சொன்னேன். இன்று தெரியும் குட்டு. :-)

***

இன்று காலை எங்கள் கம்பெனியில் இலவசமாக ட்ரெயினி எடுக்கிறோம் என்று சொன்னதற்கு, இரண்டு மூன்று வருட எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் எல்லாம் ( சாப்ட்வேர் தான்! ) வந்திருந்தார்கள் .... என்னை பொருத்த வரை ஒன்றும் தேறவில்லை. இவன் சொந்தம், அவன் சொந்தம், பாஸுக்கு சொந்தம் என ஐந்து ஆட்கள் எடுத்தோம்! இப்படிதாங்க சாப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் நடக்குது. :-) அப்புறம் சரியான ட்ரெயினிங் பூட்காம்ப் நடத்தினால் நன்று!

***

நாற்பது லட்சம் அளவில் ஒரு இரண்டு பெட்ரூம் ப்ளேட் வாங்கும் எண்ணம் வந்துள்ளது. அம்மாவிற்கும் அந்த வீடு பிடித்தது, கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது. இன்னும் சில லட்சங்கள் தேவை, அட்வான்ஸ் கொடுக்க. என்ன செய்வது தெரியவில்லை.

***

வெள்ளி மதியம் சேலம் வழியாக ஊருக்கு கிளம்புகிறேன், அம்மாவோடு... இனி அடுத்த செவ்வாய் காலை தான் திரும்புகிறேன். கல்யாணம் நிச்சயம் என்று போகிறது வாழ்க்கை. இன்று வரை நான் ஒரு முடிவும் எடுக்கவில்லை! :-)