Showing posts with label குஸ்பு. Show all posts
Showing posts with label குஸ்பு. Show all posts

Thursday, May 28, 2009

தமிழன்னை கோவில்

எங்கள் ஊருக்கு அருகில் எங்கள் ஜாதிக்காரர் தமிழன்னை கோவில் ஒன்று கட்டுகிறார் என கேள்விப்பட்டேன்.

நாங்கள் தெலுங்கு பேசும் ஆட்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பிறந்ததால், நாங்களும் தமிழர் தான்! தெலுங்கு எழுத வராது!

அவனவன் ஊரு விட்டு ஊரு போய், பஞ்சம் பொழைக்க போன இடத்தில் எல்லாம், தனி நாடு கேட்டுக்கொண்டு இருக்க ( இரண்டு லட்சம் பேர் சாகவும் காரணமாயிருந்து ) இது நல்ல விஷயம் என்று மனதில் படுது...

வாழ்த்துக்கள் நாயக்கர்வாள்!

*******
தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனை என்ற வரி என்னை யோசிக்க வைத்தது.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,ஓ, ஔ, ஃ என்ற எழுத்துக்களை ராகமாக பாட போகிறார்களாம். அருமை!

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய்
தே ஞானம் பெற்று வாழ்வோம் தேவி!
( நாமளும் தமிழருன்னு காட்டிட்டோமில்லே, ஆங்... )

கடைசி லையின் நம்மளுது...