Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, March 26, 2010

கண்ணதாசன்

கண்ணதாசன் பாடல்கள் மட்டும் அருமை.
அவர் வாழ்க்கை சிறுமை.
குடி கும்மாளம் கூத்து
பல மனைவிகள் என்றிருந்தவர்
எதிர்காலத்திற்கு இல்லாத வாழ்க்கை முறை
எரிசல் தான் வருகிறது
ஜோதிடம் கற்க வந்த இடத்தில
ஜோராக உபதேசம் ஏன்?

Friday, March 5, 2010

நான் கடவுள்

நான் கடவுள்
என்று சொல்லி
விவாதம் செய்கிறார்கள்
பதிவுலக மக்கள்

வரம் கொடுத்தேனா ?
ஊரை ஏமாற்றினேனா?
நடிகைகளோடு சல்லாபித்தேனா?
அரசியல்வாதிகளுக்கு
சொத்து சேர்க்க வழி தான் கொடுத்தேனா?

இல்லை இல்லை
நான் செய்த தவறு
தினமும்
விலை மலிவு என்று
வாங்கிய காட்டிய
காவி வேட்டி செய்யும் வேலை!

( ஆனால் உள்ளே போடும்
கோமணம்
கெல்வின் களையின் தான்
தெரியுமில்லே? )

கடவுளும் வரமும்

என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத நீ
என்ன கடவுள்?

ஓர் பி. ஏ வச்சுக்க...
ஆமா...
இல்லே...
நித்தியானந்தர் கிட்டே கேளு
அதான்யா ராஜசேகரன்
புட்டு புட்டு வைப்பான்
கேட்காமல்
வரமும் கொடுக்கலாம்....

பத்திரம்..
அப்புறம் ரம்பா மேனகா ஊர்வசி
எல்லோரும் அவன் பின்னால்
ஓடிப்போயிடுவாங்க...
தமிழ்நாட்டிலே இருந்தில்லே
இந்திரலோகத்திலே இருந்து!

மற்றொன்று...
காசிலைன்னு கவலை வேண்டாம்
சுருட்டற வழி தெரியும்
சொல்லிக்கொடுப்பான்
வேறு கிரகத்திற்கு கொடுக்கலாம்!

சில சமயம் நம் மக்கள் இருக்கும்
வெளிநாட்டு போருக்கு கூட
காசு கொடுக்கலாம் என்பான்
ஹவாலா ரூட்டு
வேண்டாம் கடவுளே
நம் நாட்டை மட்டும் பார்!

கடவுளே
கடவுள்
திருந்த
வரம் கொடு!

Monday, March 1, 2010

பனி மழை

பனி மழை எங்கும் பொழியுது
குளிரால் மனம் வாடுது
உடலும் நடுங்குது
பச்சை நோட்டுக்களை
தேடி வந்த தமிழார் நாங்கள்
குளிரென்ன பனியென்ன
எதுவும் ஒக்கே
எங்கள் பணி வெள்ளைக்காரருக்கு
பணி செய்து கிடைப்பதே
கூடிய சீக்கிரம் சம்மர் வருமே
ஒரு நாள் விடிவு மலரும்
எங்கள் வாழ்வில் விடிவெள்ளி வரும்
நல்ல பேன்க் பேலன்ஸ்
இருந்தால் வாழ்வு சுபிச்சமாகும்
ஆபிசில் உருப்படியா வேலை
செய்தால் பசியும் மறந்திடும்

Monday, February 1, 2010

இறை நிலை இயற்கை

இயற்கை
இறை நிலை
இரண்டும் ஒன்று தான்
எனக்கு கல்யாணம்
நடந்தவுடன்
மனைவியோடு தெரிந்தது
கெட்ட விசயமில்லை
அனுசரித்துப்போவது....
வேண்டுவதை தருவது
கேட்பதை கொடுப்பது
அம்மாவிடம் கிடைப்பது
எல்லாம் கொடுக்கும் வரம்
மனைவியிடம் கிடைப்பது
கேளா வரம்!
புரிந்தவர்கள்
பாக்கியசாலிகள்

***

கடும் குளிரில்
நேரடி வேலையில்லாமல்
வேலைக்காக வேளையில்
ரேசிசம்
ஜிங்கோயிசம்
மெகார்த்தியிசம்
எல்லாம் செய்யும் அமெரிக்கா
சோசியலிசம் மட்டும்
விட்டு வைப்பது ஏன்?

அட போங்கையா
ஹைட்டியிலும் கடை விரித்தால்
பெட்ரோல் கிடைக்குமோ என்னவோ
இல்லை கூபாவை
மிரட்டி பணிய வைக்க
இன்னொரு மேற்கிந்திய கூடாரமா?

***

இறை நிலை
உணர்த்தும்
ஒவ்வொருவரின்
புருவத்தின் மத்தியில்
இருக்கும் வரை!

புதிய தலைமுறை

அமெரிக்காவில் நான் சந்திக்கும்
ஒவ்வொரு இந்தியரும்
விசா பற்றியே பேசுகிறார்கள்...
வாழ்க்கையின் ஏமாற்றங்கள்...
புதிய தலைமுறையின் வருத்தங்கள்....
ஏன்?
புதிய வழிமுறையாம்
ஒபாமாவின் சீற்றமாம்
திருப்பி அனுப்புகிறார்களாம்
என்ன செய்வது
இலங்கைக்கு ஒப்பிடுகிறார்கள்
திறமை இருந்தும்
கூலிக்கு வேலை செய்யாமல்
என்ன செய்வது?
நேரடியாக வேலை இல்லையே?
சே
கருப்பனாக பிறந்திருக்கலாம்!
எப்படியோ பிழைத்திருக்கலாம்!
புதிய தலைமுறை
இப்படித்தானோ?
இந்தியா சரி, இண்டியா சராசரி!

Wednesday, January 20, 2010

புலப்படாத உண்மை

எனக்கு புலப்படாத உண்மை!
ரயில்லே செகண்ட் ஏசியில் போறார்
டெலிபோன் கிளார்க் ஜெயமோகன்
திருப்பூர் பனியன் கம்பெனியிலே
வேலை பண்ணுறே பரிசல்காரன்
காரிலே ஊர் சுத்துறாங்க!
ம்... நடத்துங்க!
சினிமாவில் இருந்து
வருது ஜெயமோகனுக்கு!
கஷ்டத்தில் உழைப்பில்
வருது பரிசல்காரனுக்கு!
வசதி இருந்தால்
செய்ய வேண்டியது தானே?
வாழும் நிமிடத்தில் இருக்கும்
வசதியோடு வாழ்வது உத்தமம்!
ஐ.டி. அமெரிக்கா
என்று இருக்கும் நான்
இன்னும் கார் வாங்கலே!
ஒரு நாள் லைசன்ஸ் வரும்
ஓட்டப்போறேன் ஏசி காரு...
இந்தியாலே லைசன்ஸ் உண்டு!
என் இயலாமை தான்...
இப்படி ஒரு பதிவு! சே கவிதை!

Saturday, December 26, 2009

மதம்

அவர்கள் வீட்டில் கிறிஸ்தமஸ் மரம்
குழந்தைகள் குதுகளிப்பு
கிடைத்தது பரிசுகள்
பெற்றோர் மனதில் சந்தோஷம்

இந்துத்வாவை வளர்ப்போம்
இந்தியாவை காப்பாற்றுவோம்
ராமருக்கு கோவில் எழுப்புவோம்
கிளம்புகிறார் அரசியல் அப்பா

Saturday, December 5, 2009

காலத்தின் கணக்கு

சொல்வதெல்லாம் உண்மை என்றால்
சொல்லாது என்னவாகும்
செத்த கடலில் நீரில் மிதக்கலாம்
மற்ற கடலில் என்ன நடக்கும்?
மீன்கள் நடக்காது என்றார்கள்
விக்கிபீடியா இல்லை என்றது
என்சைக்லோபீடியாவும் சொன்னது
மாற்றங்கள் உண்டு எதிலும்
கிரிக்கெட்டில் பாஸ்ட், ஸ்பின் போல
அண்டர் ஆர்மும் இருக்கல்லவா?
அது ஆஸ்ட்ரேலிய ஜெயிப்புக்கு
நியூஜீலாந்து பட்டது நஷ்டம்...
காலத்தின் கணக்கு
நீச்சல் பழக சொற புறடை
கட்டி பழகியது போல....

( சத்தியமா இது எந்த போட்டிக்கும் இல்லைங்க! )

Sunday, September 27, 2009

நானொருவன்

குருக்களே கோவிலில் கசமுசா
இது செய்தி
தெய்வம் நின்று கொல்லும்
இது பழமொழி

நானொருவன் என்று எனக்கு
தெரிந்த போது வயதென்ன?
இன்று நானே எனக்கு சொல்ல
ஆசைப்படுவது என்ன?

நாளை வரும் என்று மகிழ்வோடு
நான் காத்திருக்கிறேன்
என் வாழ்வில் வரும் புதிய ஒளி
எண்ணங்களில் பெண்மணி

வாழ்கையில் ஒவ்வொரு எண்ணம்
மகிழ்ந்திட வந்திடும்
காத்திருப்புக்கள் எல்லாம் இன்பமயம்
கனா காணும் காலங்கள்

Tuesday, September 8, 2009

பத்தாயிரம் வாசகர் பார்வைகள்

பத்தாயிரம் வாசகர் பார்வைகள் வரப்போகுது! நண்பர் விஜயஷங்கர் சொல்லி விளையாட்டாக இந்த வலைப்பூ ஆரம்பித்தேன். இப்போது நிறைய பேர் படிக்கிறார்கள். எழுதுவதற்கு ( என் தாய்மொழி இல்லாவிட்டாலும் ) நிறைய விசயம் உண்டு இங்கு. இன்னொரு நண்பர் சுந்தரவடிவேலுவும் அவர் ஊக்கம் கொடுத்து எழுத வைக்கிறார்!

ஒரு புதுவை பதிவர், என் மனதை புண் படுத்தியமாதிரிஇருந்தது. அவரும் மன்னிப்பு மெயில் போட்டுள்ளார். தேங்க்ஸ். மறப்போம் மன்னிப்போம்.

***

நூற்றி முப்பது பதிவுகளில், ஒரே ஒரு கதை, அதுவும் சொதப்பல். அதோடு நின்றது கதை எழுத்துப்பயணம். ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினேன். பரிதாபம்!

கவிதை இன்னொன்று இங்கே...

பத்தாயிரம் பார்வைகள் வந்தன
பரவசம் அடைந்தேன்
நிலாச்சோறு கிடைக்குமா என்றிருந்தேன்
பவுர்ணமி வந்தது
அம்மா இல்லாத ஏக்கம்
பாசம் கிடைக்காது துக்கம்
வருகிறாள் புது மனைவி!

அப்புறம் இந்த மாதிரி ( அதிஷாவின் கவிதை ) எனக்கு வராது!

நீல நிற இரவுகளில்!

***

நான் படித்த கோவை கல்லூரி நண்பர்கள் ( முற்றிலும் சீனியர்கள் ) ட்விட்டரில் இருக்கிறார்கள்... வெண்பா, அது இது என்று தூள் கிளப்புறாங்கையா! நானும் தான் ட்விட்டர் பண்ணுறேன்.

***

வேலை விசயமாக இந்த வார கடைசியில் நியூ யார்க் பயணம் - ஒரு வாரம் - ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பனிக்கு சாப்ட்வேர் வேலை இருக்கு. நாளை அமெரிக்கன் விசா வாங்க சென்னை செல்கிறேன். பயம் தகிடதோம் போடுது. சுவையின் ப்ளு வேறே ஆட்டம் காட்டுது!

அப்துல்லா அண்ணன் பதிவில் பார்த்த விஷயம் மனதில் கொண்டு மேலும் வினிதாவின் பதிவில் கண்ட விஷயங்கள் மனதில் கொண்டு, தயார் செய்து வேண்டுகிறேன்.

காசே தான் கடவுளடா

All about USA visa

கடைசியில் எங்கள் கம்பெனிக்கு நல்லது நடந்தால் சரி.

எனக்கும் தான்! :-)

Wednesday, July 22, 2009

சூரிய நிகழ்வு

எல்லோரும் எதிர்பார்த்த
சூரிய கிரகணம் வந்து போயிற்று.
இன்று காலை சீக்கிரம்
எழுந்து குளித்து
டிவி முன்
அதிகாலை ஐந்தரைக்கு ஆஜர்.
சேனல்கள் மாற்றி மாற்றி
பார்த்து ஒரே போர்.

மேகங்கள் மூட்டம்
பெங்களூரில் ரொம்போ
சிறியதாக தான் தெரிந்தது
அறுபத்தைந்து %
தெரியும் என்றார்கள்?

கிரகணம் என்றாலே,
குளியல் என்று அம்மா
சொல்லியுள்ளதால்...
இரண்டாம் முறை
ஏழரைக்கு தலை குளியல்.

அப்புறம் வந்த பாலில்
நானும் ரூம்மேட்டும்
எப்.எம்மில் பட்டு
கேட்டுக்கொண்டே
கன்னடம் பழகி
பேப்பர் பார்த்து,
காபி குடித்து முடித்து...
கில்மா ...
அட எப்போதும் போல
டைம் ஆகிவிட்டது!

அடுத்து கிரகணம்
2132 ஆம் வருடம் தானாம்...
சுனாமி வரவில்லை,
பாம்பே மூழ்கவில்லை...
போங்கையா நீங்களும்
உங்க ஜோசியமும்!

Tuesday, July 14, 2009

தேக்கம்

உலகம் முழுவதும்
கம்ப்யுட்டர் தொழில் தேக்கம்
என்ன செய்வது இந்த கவலையில்?

சோறுண்டு வீடுண்டு
ஆனால் நிம்மதியில்லை
எண்ணங்களில் தேக்கம்

காதலினால் நிம்மதி வருமா?
சொல்லடி என் பெண்ணே?
ஏன் ஆசையை தேக்கி வைக்கிறாய்?

Thursday, June 4, 2009

முயற்சி திருவினையாக்கும்

இங்கே இருக்கு படம்...

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 5



முயற்சி திருவினையாக்கும்
உதயசூரியனைப்பாருங்கள்
எண்பத்தாறு வயதாம் அவருக்கு
பல கோடி வருடங்களுக்கு சமம்

சிறு சிறு நட்சத்திரங்களும்
அவரவர் இடத்தை அடையும்
இங்கு மக்களும் நாடாளும்
விதத்தில் பங்கு கிடைக்கும்

கோபம் கொண்ட சிறு பெண்
தன் கனலை காட்டுது
உன் தணலால் அப்பெண்ணை
அரவணைத்து காப்பாற்றிடுவாய் அய்யா!

Thursday, May 21, 2009

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3

இங்கே இருக்குங்க என்னோட இன்னொரு கவிதை...

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3

காதல் சண்டே



உன்னிடம் சண்டைபோடும் நாளா சண்டே?
காதல் மொழி பேசும் நாளா சண்டே?

இன்டர்நெட், சாட் என்று கும்மி அடித்தோம்
ஹோட்டல், பப் என்று சுற்றினோம்

மல்டிப்ளெக்ஸ் அனைத்தும் பார்த்துவிட்டோம்
மால்கள் அனைத்தும் அளந்துவிட்டோம்

அடல்ட்ஸ் என்ன குழந்தை என மொழி பேசி
காதல நினைவுகள் பருகினோம்

வேலை காரணம் நாம் பிரிந்தாலும்
ஊர் மாறினாலும் மறக்கமாட்டேன் என்றாய்

இருந்தாலும் என்னை மறந்துவிட்டாயா தோழி
சண்டே எனக்கு பிறந்த நாள்!

Thursday, May 14, 2009

வாக்குறுதிகள் நிறைவேறுமா ?

இந்த பதிவில் படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 2 ஒரு படம் இருந்துச்சு. அதுக்கு ஒரு கவிதை எழுதிப்பார்த்தேன்...




அவீங்க வந்துட்டு போனாங்க
வாக்குறுதி எல்லாம் கொடுத்தாங்க
இன்னும் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும்
நாம் காத்திருக்கணுமா?

Wednesday, April 29, 2009

தமிழ்வாணன் நாவல்கள்

சிறு வயதில் (ஒரு பத்து வருடம் முன்) நான் விரும்பி படித்தது, அக்கா வீடிற்கு போகும் போது, மதுரையில் நூலகத்தில் கிடைக்கும் தமிழ்வாணன் நாவல்கள். அவை ஆங்கில ஷெர்லக் ஹோம்ஸின் தமிழ் வடிவமாக இருக்கும்.

இப்போது தமிழில் அதை கொண்டு வருகிறார்கள்...

இங்கே படியுங்கள்...

ஷெர்லாக் ஹோம்ஸ் - தமிழில்

நான் போட்ட கமன்ட்....

//நிச்சயம் ஒரு மார்கெட் இருக்கும். இன்னும் தமிழக லைப்ரரியில் (நூலகம்) தமிழ்வாணன் டிடெக்டிவ் புக்ஸ் வாங்குகிறார்கள் (மணிமேகலை பிரசுரம்). உங்கள் பதிப்பு நூல்கள் வாங்கும் நாட்கள் விரைவில் வரும்.

மக்கள் (இந்தியர்கள், தமிழர்கள்) விலையில் முழு கவனம் வைத்திருப்பார்கள்.

அதனால் நூறு ரூபாய்க்கு கிழே, புத்தககங்கள் நல்ல விற்பனை ஆகும்.//

***********

அப்புறம் இந்த கவிதை படித்தேன்...

கார்காலம்

கவிதை, அரசியல்வாதிகளின் ( அத்வானி ) சுயரூபத்தை தோலுரித்து... காட்டுது...

நன்றி நன்றி!