எங்கள் ஊர் வீட்டுக்கு ஒரு முறை வந்த ஒரு சாமியார் ( குரு ) வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள் தேவை என்று சொன்னார்.
* சுற்றம்
* பணம்
* ஆன்மீகம்
எதற்கு என்று கேட்டேன். வயது வரும் போது உனக்கே தெரியும் என்று சொன்னார்.
நிறைய சுவாமிகளிடம் கேட்டேன், விளக்கம் இல்லை.
இன்று அந்த சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து மிகவும் நல்ல முறையில் இருக்கிறார் ( ஆன்மீகம்? ). நல்ல பெரிய இடது சீடர்கள் ( சுற்றம்? ) மட்டும் பணம் (?) கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எந்த தியான வகுப்புக்கும் ரூபாய் ஆயிரம், ஐந்தாயிரம் , ஐம்பதாயிரம், மூன்று லட்சம் என்று வாங்கி ( டாலர்களிலும் கொடுக்கிறார்கள்... ) ஆசிரம சேவைகளை அருமையாக செய்கிறார்.
போலீசாருக்கு மத்திய உணவு அளிக்கிறார். இலவச தியான வகுப்பு கொடுக்கிறார். (?) தினமும் ஒரு இருநூறு பேர் அங்கு இலவசமாக சாப்பிடுறாங்க!
இந்த பவுர்ணமி அன்று அங்கு ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன், என்னை கண்டுக்கொண்டார். சிறிது நேரம் பேசினார். அப்பா மறைவு பற்றி வருத்தம் தெரிவித்தார். அப்பாவின் குரு ( விசிறி சாமியார் ) தான் அவருக்கும் குரு. ஞானம் கொடுத்தவர். எல்லாம் கஷ்டமும் வாழ்க்கைக்கு படிப்பினை என்றார்.
அப்போது ஒருவர் வந்து ஒரு கிலோ எடையில் தங்கத்தில் செய்யப்பட உருத்திராட்சம் மாலை அணிவித்தார். என்னே பக்தி. ஸ்வாமிகள் என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். ஆயிரம் அர்த்தங்கள்!
நான் என் வண்டியில் ஆசிரம உள்ளே வரை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் விடுகிறார்கள். எல்லாம் அவரை தெரிந்ததால் தான்! மற்றவர்கள் எல்லாம், வெளியே தான் வண்டியை நிறுத்தி உள்ளே செல்ல வேண்டும். ( சாமியார்களிடதிலும் ஏற்ற தாழ்வு, சூது வாது உண்டா? )
எனது ஆந்திர முஸ்லீம் நண்பர் ஒருவரும் அவரிடம் தியான வகுப்பு படித்தவர். ஒரு பவுர்ணமியில் வரம் வாங்கினார், நல்ல பெண் அமைய. இன்று அவருக்கு ஹைதரபாத் நிஜாம் குடும்பத்தில் இருந்து சம்பந்தம் அவர்கள் எதிர்பார்க்காத மாதிரி வந்துள்ளது. ஆன்மீகத்தில் மதம் கிடையாது என்பது நிரூபணம் ஆயிற்று போல. (!)
+++++++++++++
சரி நான் கண்டுகொண்டது என்ன?
ஆன்மீகம் - வாழ்க்கையை சந்தோசமாக அணுக, நல்ல சுற்றமும், பணமும் இருந்தால்
சுற்றம் = உறவினர்கள் மற்றும் நண்பர்கள் - காசு இருந்தால் தான் எல்லாம்.
பணம் = சுற்றம் மற்றும் ஆன்மீகத்திற்கு இது மிகவும் அவசியம்.
எல்லாமே ஒரு லூப் தான்.
தன் கையே தனக்குதவி.
Super!
ReplyDeleteHappy Independence Day!