Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

Monday, August 3, 2009

புத்தம் புது காலை

புத்தம் புது காலை இன்று ஏழு வாரங்கள் கடந்த பிறகு, நான் என் அலுவலகத்தில்! :-) எல்லோருக்கும் வாங்கி வந்த சாக்லேட்ஸ். என் பாசுக்கு ஒரு சிறு கிப்ட். ( ஐஸ் ஐஸ் பேபி ).

என் மேஜையை (கேபின் - கதவு வைத்தது) கான்பரன்ஸ் ஆக உபயோகித்துள்ளனர்.

நல்ல வேலை, என் லெட்டர்ஸ் அனைத்தும் நண்பர் ஒருவர், எடுத்து வைத்திருந்தார். சில பல ஸ்பேம்.

ஆண்லயினில் கிரெடிட் கார்ட் பில் கட்டிவிட்டேன். அதனால் விட்டது தொல்லை. கொஞ்சம் கூட கார்டல் எக்ச்பென்ஸ் செய்யலே!

பாஸிடம் நல்ல பேர். அங்கு ஆகும் செலவுகள், வரும் வருமானம் பார்த்து, இன்னும் ஐந்து யுரோ ஜாஸ்தி கொடுத்தார் ஒரு நாளுக்கு. பரவாயில்லை.

இன்னும் ஆறு வாரத்தில் இரு நண்பர்களும் ஆம்ச்டேர்டேமில் இருந்து திரும்புவார்கள். அதற்குள் எல்லா வேலையும் முடிந்திருக்கும்.

அடுத்த ப்ராஜக்ட் தேட வேண்டியது தான்.

அமெரிக்காவில் இருந்து ஒரு ஈ.ஏ.ஐ. ப்ராஜக்ட் வருதாம். பாசும் நியூ யார்க்கில் அல்லது வாஷிங்கடனில் ஆபிஸ் திறக்க ஆயுதம் செய்கிறார். பார்ப்போம். இன்னும் பத்து புது முகங்கள் ஆபீஸில் வரும்.