Monday, September 14, 2009

கல்யாணம் கச்சேரி

பதிவுகள் நிறைய நீளமாக போய்விட்டன... கொஞ்சம் வெட்டி இன்னொரு பதிவாக போடுகிறேன்...

அம்மா சொன்ன பெண்ணையே கல்யாணம் செய்ய முடிவு. :-) பழைய பதிவுகளை பாருங்க , இந்த மாதம் இறுதியில் ரெஜிஸ்டர் கல்யாணம் ( போட்டோஸ் உட்பட எடுப்போம் ) அப்புறம் விசா அப்பளை செய்யணும்! கல்யாணம் செய்த பின்னால், நானும் எல் 2 விசாவோடு ( பியன்செவுக்கு ப்ரின்செடனில் ஒரு வருடம் ப்ராஜக்ட் அக்டோபர் மாதம் முதல் ) இங்கு வந்து, கம்பெனிக்கு ஒரு ஆபிஸ் திறந்தால், இருந்தால் இருக்கலாம், இல்லாவிட்டால், எப்படியோ பெங்களூருவில் கொஞ்ச காலம் ஓட்டனும்!

சரி புரட்டாசி மாதம் கல்யாணம் செய்யலாமா கூடாதா? கோவிலில் வைத்து செய்யலாம் என்று சொல்லுகிறார், என் மாமா. விஜய தசமி அன்று நல்ல முகூர்தமாம்!

இப்போவே பாஸ் சொல்லிட்டார், சம்பளம் அதிகம் எதிர்பார்க்காதே! என்று.

***

ரின் சோப் பார் கொண்டு வந்தேன். அதனால் உள்ளாடைகளை துவைத்து உலர்த்த பயம் இல்லை. ஹேங்கரில் காய போட்டுவிட்டேன்! ஐயர்ன் பாக்ஸ் இருக்கு! ஷர்ட் பேன்ட்ஸ் துவைக்க முடிந்தால் சரி. நிச்சயம் ஹோட்டலில் முடியாது, சரியான காசு! ஹோட்டல் அருகில் ஒரு லாண்டரோமெட் இருக்கு. ஐந்து டாலரில் ஒரு லோடு வேலை முடியும்! சலவைக்கு கவலை இல்லை.

***

இங்கே எவனை பார்த்தாலும், "ஹாய்" சொல்லுகிறார்கள். பழக்க வழக்கம்!

இப்போ தான் சச்சின் டெண்டுல்கர் சென்சுரி அடித்ததை வெப்பில் பார்த்தேன்! ஸ்ரீலங்காவிற்கு எதிராக இது எட்டாவது சதமாம்.

காலை ஒரு டோனட்டும் காபியும் தான் ப்ரேக்பாஸ்ட். அப்படியே ஒரு ஆப்பில் கடித்துக்கொண்டேன். மதியம், வயிற்றுக்கு சேருகிற மாதிரி உருப்படியாக ஏதாவது சாப்பிட்டால் ஆயிற்று!

தினமும், மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம், க்ளையண்ட் சைடில் இருவர், எங்களோடு செலவு செய்து ரேகொயர்மேன்ட்ஸ் சொல்லுகிறார்கள் என ப்ளேன். எங்கு சாப்பிட அழைத்து செல்ல வேண்டுமோ!

பத்து மணிக்கு தான் முதல் மீட்டிங். அதனால், கொஞ்ச நேரம் ப்ளாகில் மேய்கிறேன்.

நியூ யார்க் வந்தாச்சு 2

இதை முதலில் படியுங்க... நியூ யார்க் வந்தாச்சு

தொடர்ச்சி....

பாஸ் வேர்க்க விருவிருக்க, அவர் மொபயிலில் எதோ பேசிக்கொண்டு இருந்தார். அவர் வருடம் ஒரு முறை குடும்பத்தோடு அமேரிக்கா வருபவர், சோ நோ ப்ராப்ளம்! மேட்ரிக்ஸ் கார்ட் வாங்கியிருந்தார்.

ஐந்து நிமிடம் பேசியிருப்பார்... அப்போது நேரம் மதியம் ஒரு மணி. இந்தியாவில் இரவு பத்தரை. மகளுக்கு உடல் நிலை சரியில்லையாம், எக்சாம் வேறு. அதனால் கொஞ்சம் டென்சன் என்றார்!

கிரீன் சானல் வழி சென்றோம். அங்கு பாஸ் தம்பி நின்றிருந்தார். பாஸ் எப்போதும் போல நியூ ஜெர்சி சென்று தங்குவார். டாலர் கவரை கொடுத்து விட்டேன். என் கையில் இன்னொருவரின் இரண்டாயிரம் டாலர் கேஷ். பயம்!

எங்கள் கம்பெனி டைரக்டர் சீனிவாசனும் அங்கு இருந்தார். அவர் தான் என்னை ஹோட்டலில் கொண்டு செல்ல ஏற்பாடு. நாற்பது நிமிஷ டிரைவ். முன் சீட்டில் தூங்கிவிட்டேன். ஹோட்டலில் செக்கின் செய்ய அவர் கார்ட் ஸ்வயிப் செய்தார். என் பாஸ்போர்ட் காபி எடுத்து வைத்துக்கொண்டார்கள். ( நெதேர்லாண்ட்சில் இப்படி இல்லை, பாஸ்போர்ட்டை ஜஸ்ட் ஒரு பார்வை ).

ரூம் சென்று விட்டு, குளித்து விட்டு வெளியில் ஒரு டெலியில் சாண்ட்விச் காபி. ரெஸ்ட் எடுத்தால், ஜெட் லாக் தீராது என்று அவரோடு, நியூ ஜெர்சி பயணம்!

வழியெங்கும் லிங்கன் டணலில் இருந்து ஜெர்சி சிடி சைடு செல்லும் வரை வேடிக்கை பார்த்தேன்... மீண்டும் தூங்கிவிட்டேன். அங்கிருந்து அரை மணி நேரம். அவர் வீடும் பாஸ் தம்பி வீட்டு அருகில் தான். முதலில் அங்கு அழைத்து சென்றார். வடை பாயசம் கிடைத்தது. அப்போது தான் தெரிந்தது அவர் ஏ.டி. & டி கம்பெனியில் கன்றேக்டராக வேலை செய்துகொண்டே இந்த பிசினஸ் செய்கிறார். ( எங்கள் கம்பெனியில் ஷேர் ஹோல்டிங் பார்ட்னர் )

பிறகு பாஸ் வீடு சென்றோம். அங்கு ஒரு சிறிய அறை, தம்பியின் ஆபிஸாம்! தூக்கம் வேறு கண்ணை கட்டியது. காபி குடித்து குடித்து வயிறு வேறு கலக்கியது. பாத்ரூம் சென்றாலும் கழுவ இடம் இல்லை. திஸ்ஸு பேபர் தான்!

பிறகு பிசினஸ், யு.எம்.எல் டெம்ப்ளேட் பற்றி பேசினோம். ஒரு வாரத்தில் என்னவெல்லாம் முடிக்க முடியும் என்று பேசினோம். அவர் முதல் நாளும் கடைசி நாளும் வருவதாக சொனார். நானும் பாஸும் முதல் நாள் முழுதும் இருப்போம். அப்புறம் பாஸ், வாஷிங்க்டன் டி.சி. செல்கிறார், இன்னொரு ப்ராஜக்ட் விசயமாக. வியாழன் வந்து விடுவார். வெள்ளி வேலை முடியுமா? தெரியவில்லை.

அப்புறம், சர்ப்ரைசாக, மாயா என்ற பெண் வந்தார். மணமானவர்! அமெரிக்கன் மாதிரி டிரெஸ்ஸிங். எங்கள் கம்பெனிக்கு காண்ட்ரேக்ட் செய்ய அவர் ஒரு வாரம், எங்களோடு (!) இருப்பார். பிசினஸ் அனலிஸ்டாம்.

அங்கு செய்யும் வேலையை, ஒரு டாகுமெண்டாக கொடுத்தால், சில ஆயிரம் டாலர்கள் மினிமம் கியாரண்டி வேறு! நாங்கள் வந்து போகும் செலவு, மாயா சம்பளம் உட்பட! பத்து பேரோடு எப்படியோ மூன்று மாதத்தில் இந்த ப்ராஜக்ட் முடிக்கலாம். பிறகு இன்னொரு வெர்சன், அவர்கள் விருப்பப்பட்டால்! ( மாயாவும் அதுவரை இங்கு கோ ஆர்டினேடராக இருக்கலாம் ).

***

இரவு பாஸ் தம்பி வீட்டில் டின்னர், ஆந்திர சாப்பாடு... காரமாக.. ஏழு மணிக்கு. குழந்தைகள் சிறிது தெலுங்கு பேசினார்கள்! எட்டு மணிக்கு சரியான தூக்கத்தில் ஹம்ப்டன் இன் வந்தேன். தூங்கியவன், காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்தது அடிக்க எழுந்தேன். இப்போ ஜெட்லாக் இல்லை... மதியம் பார்ப்போம்!

எப்படியோ இங்கு வேலை இரண்டு வாரமாகிவிடும் என தெரிகிறது! ஐயோ அப்பா ஹோட்டல் சாப்பாடு கொல்லும்! இன்றிரவு முடிவு செய்வோம்.

இந்த வால் ஸ்ட்ரீட் கம்பெனி மார்கெட்டிங் ஆள் திங்கள் எட்டு மணிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்! ரெடியாகி, ப்ளாக் டைப் செய்தபடி வெயிடிங்.

இங்கே இன்டர்நெட் படு சூப்பர்! ஸ்பீட். ஐயா ஜாலி ஜாலி!

நியூ யார்க் வந்தாச்சு

நியூ யார்க் இறங்கும் போது தூரத்தில் சுதந்திர தேவி சிலை தெரிந்தது. என்னவோ மனதுக்குள், ஒரு வறுமை. போன ஜென்ம தொடர்போ? ட்வின் டவர்சை காணவில்லை... அதனாலா? எட்டு வருடம் முன் தகர்க்கப்பட்ட நினைவு வேறு வந்து தொலைத்து!

நியூ யார்க் இறங்கும் முன், ஐ 94 பார்ம் பில்லப் செய்தோம். வெள்ளைக்கலர். மனசெல்லாம் வெள்ளை என்ற பாட்டு தானாக ஞாபகம் வந்தது! உலகில் ஒவ்வொருவரும் அமெரிக்காவை காண வாழ்க்கையில் ஒருமுறையேனும் வரத்துடிப்பார்கள் என்று அமெரிக்கா போகணுமா என்று எழுதிய சுவடு சங்கர் ஞாபகம் வந்தார்!

க்ளையண்ட் கொடுத்த பேக்ஸ். ஆளுக்கு ஒரு காப்பி. ஹோட்டல் ரிசர்வேசன் எனக்கு. அவருக்கு அவர் தம்பி லெட்டர். இருவரும் பேசி வைத்த மாதிரி, வேறு வேறு லையின். எதுக்குங்க வம்பு?

ஒரு கருப்பு மொட்டை தலை செக்கிங் ஆபிசர் ( ஷாருக்கான் சம்பவம் நினைவில் வந்தது! ) என்னை ஏற இறங்க பார்த்தார். சிரித்தார்! " இஸ் திஸ் யுவர் பர்ஸ்ட் டைம் ஹீர்? "... மீண்டும் புன்சிரிப்பு.. " எஸ் சார் " விறைப்பாக பதில் சொன்னேன். மறக்காமல் சிரித்து வைத்தேன்.

கைரேகை செக்கப், போட்டோ பிடிப்பு, விசாரிப்பு. இரண்டு முறை, இது பிஸ்னஸ் ட்ரிப் தானா என்று கேள்வி வேறு. ஆம் என்றேன். கோட்டு சூட்டு வேறு போட்டிருந்தேன்! ( எதுக்குங்க இப்படி தொல்லை? ) கடைசியில் " யு லுக் லைக் ஏ மூவி ஸ்டார்! " என்று சிரித்தபடி ஆறு மாதம் இருக்க சீல் அடித்து கொடுத்தார்! " தேங்க்ஸ், அப்பிரிசியேட் இட்! " என்று சிரித்த படி கச்டம்சில் பெட்டி எடுக்க வந்தேன். அங்கு...

அடுத்த பதிவில் தொடரும்...

(முந்தைய பதிவு நியூ யார்க் கிளம்புதல் படித்தீர்களா? )

நியூ யார்க் கிளம்புதல்

பெங்களூருவில் கிளம்பும் போது அங்கு ஞாயிறு அதி காலை ஆனது. சனி இரவு மெயில் எல்லாம் செக் செய்தவுடன், வீட்டிலிருந்து இரவு பத்து மணிக்கு, அம்மாவும், தம்பி மற்றும் ரூம் மேட சரவணனுடன் டாக்க்ஷி பயணமாக பெங்களூரு இண்டர்நேசனல் ஏர்போர்ட்.! சரமாரியாக ஓட்டினார், டேக்சி ட்ரைவர்! பயம்... வழியில் நிறைய அடிபடல்கள்... எக்சிடன்ட்ஸ்.. பதினோரு மணிக்கு ஏர்போர்ட் வாசல். திருவிழா கோலம்... பிக்கப் செய்ய வந்த கூட்டம் அதிகம்! கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பிரியாவிடை... டாடா பாய் சொல்லிவிட்டு செக்கின் கவுன்ட்டர் போக இன்னும் அரை மணி நேரம்...

முதல் முறை தொலை தூர பயணம். கோவை ஷரோன் சாப்ட்வேரில் வேலை செய்யும் போது சிங்கப்பூர் வழியாக, மெல்போர்ன் ஆஸ்த்ரேலியா சென்ற போது, சென்னை வழியாக சென்றேன். ஒரு சனி திண்டுக்கல் சென்று விட்டு, ஊரிலிருந்தே, மதியம் டாக்சி மூலம் சென்னை ஏர்போர்டுக்கு சென்று விட்டு, அம்மாவும் தம்பியும் திரும்பினார்கள்.

***

பெங்களூரு விட்டு கிளம்பியதும், ஒரு மணி நேரத்தில் ஒரு சிறு ஸ்நாக் / டின்னர் கொடுத்தார்கள்.

உயரமான ஜெர்மன் பெண்கள். பெரிய பெரிய சைஸில்... இருந்தார்கள். நம்ம ஊர் பெண்கள் ஷார்ட் அண்டு ஸ்வீட். :-)

அப்புறம், இறங்கும் ஒரு மணி நேரம் முன், எங்களை ( என் பாஸு ) எழுப்பி ஒரு கவிக் சேண்ட்விச். நான் கொடுத்த ஸாலில் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன்! டிவி பார்க்கவேயில்லை. The Ugly Truth. அந்த கருமத்தை எவன் பார்ப்பான். பாஸும் பேச்சு தொந்தரவு கொடுக்கவில்லை. ( ப்ளைட் கிளம்பும் போது இரண்டாயிரம் டாலர் இருக்கு கவரில், நியூ யார்க் இறங்கியதும் கொடுத்துவிடு என்றார்! ஒருவர் கையில் இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் கரன்சி எடுத்து செல்ல கூடாது! )

ப்ரேன்க்பர்டில் இரண்டு மணி நேரம் வெயிட்டிங். அங்கு லோகல் டைம் காலை 10.35 இக்கு நியூ யார்க் கனக்சன். ஐந்து நிமிடம் முன்பாக கிளம்பியதாக ஞாபகம்! பாசொடு இது இரண்டாவது பயணம். சைலண்டாக, படுத்துவிட்டார். சாப்பிடும் நேரம் மட்டும் எழுந்தார். ஜெட் லாக் குறைய இது வழி போல!

இனி இது ப்ளைட்டில் இறங்குவதற்கு முன் எழுதியது ( ஆங்கில மூலம் தமிழிஸில். அப்புறம் தமிழ் படுத்த ப்ளாகரில் ரொம்ப கஷ்டம் )

***

அம்மாவும் தம்பியும் நடு இரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பினார்களாம்! டாக்சிக்கு போக வர, 800 ரூபாய் தான், அங்கு ஒரு அறை மணி நேரம் வெயிட்டிங்.

ஞாயிறு மதியம், கே.பி.என் பஸ்சில் சேலம் வழியாக திண்டுக்கல் இரவு சேர்ந்திருந்தார்கள்.

இப்போது கூட தம்பிகூட ஒரு விண்டோவில் சேட் செய்கிறேன்.

Thursday, September 10, 2009

அமெரிக்கா பயணம்

ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பெனி வேலை விசயமாக அடுத்த வாரம் நியூ யார்க் பயணம் செல்லுகிறேன். விசா, டிக்கட் ரெடி.

ஊரிலிருந்து அம்மா இன்றிரவு வருகிறார்கள். தம்பியும் சனிக்கிழமை காலை வருவான். என்னோடு முன் கம்பெனிகளில் வேலை செய்த நண்பர்களை அங்கிருக்கும் போது இரவு சந்திப்பேன்.

ஒரு வாரம் தான் அங்கிருப்பேன் என்றாலும், மூன்று அல்லது நான்கு நாட்களில் வேலை முடியலாம். இது முதல் கட்ட வேலை. எச்டிமேசன். அதன் பிறகு, மீண்டும் ஒரு ட்ரிப் எங்கள் கம்பெனி ஆட்கள் செல்லலாம். இதுவரை எங்கள் கம்பெனி அங்கு கிளை திறக்கவில்லை. இந்த முறை பாஸ் அவர் தம்பி கம்பெனி மூலம், முயற்சிக்கலாம். அவர் தனியாக ப்ரன்ட்லயின் என்று பாடி ஷாபிங் செய்து, பிற்பாடு விசா வாங்குவதில் ப்ளேக் லிஸ்ட் செய்யப்பட்டார் என தெரியுது. அதனால், ஒரு புதிய கிளை நிறுவனம் உருவாகலாம்.

பாஸும், நானும், வரும் சனி இரவு கிளம்புகிறோம். நியூ யார்க்கில் ஞாயிறு காலை பத்து மணியளவில் இறங்குவோம், ப்ரேன்க்பர்ட் வழியாக. லுப்தான்ஸாவில் டிக்கட் புக் செய்துள்ளார்கள். இருவருக்கும் ஒரே க்ளாஸ் தான்! ஹாம்ப்டன் இன்னில் ரூம் உண்டு. அந்த கம்பெனிக்கு நடை தூரம் தான். இந்த ஒன்பதரை மணி நேர ஜெட்லாக் என்பதை முதன்முறை அனுபவிக்கவேண்டும்.

இது வரை நான் சென்ற நாடுகளில் ஆஸ்த்ரேலியாவில் தான் ஜெட்லாக் தொந்தரவு இருந்தது. அதிகாலை சீக்கிரமாகும், தூக்கம் கண் கலங்கும், பிறகு மதியம் லேட்டாக தூக்கம் வரும். சிறிது காலம் அங்கு சென்றாலும், அதிகாலை ஏழு மணிக்கு வேலைக்கு சென்று, மதியம் நான்கு அல்லது ஐந்து மணியளவில் முதல் வாரம் வீடு திரும்பினேன்.... எவ்வளவு கஷ்டம் பாருங்கள்...

நியூ யார்க்கில் இருக்கும் எங்கள் கம்பெனி டைரக்டரும், அப்புறம் ஒரு ஜென்ட்டு உடன் வேலை சக்சஸாக முடிக்கக் வேண்டும்! ஒரு ட்ரேடிங் ப்ளேட்பாரம் ப்ராஜக்ட் இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும்! சிறியதாக இருந்தாலும், நல்லதாக இருக்க வேண்டும். ( மெயின்டெனன்ஸ் - இதுவும் ஒரு பெரிய நிறுவனம் செய்து முடித்து, ஒரு வருடத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது - காசு உருஞ்சிகிறார்கள் போல! )

:-)

சரி சரி நியூ யார்க்கில் என்னவெல்லாம், சுற்றி பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் லிஸ்ட் கொடுத்துள்ளார்கள். குறைந்த காலம்... அடுத்த ஞாயிறு இரவு செப்டம்பர் இருபது ஒன்பது மணிக்கு இந்தியா திரும்பி வரும் ப்ளைட். அதனால் இரண்டு நாட்கள் ( சனி, ஞாயிறு ) கொஞ்சம் சுற்றி பார்க்க கிடக்கும். என் பாஸு அவர் தம்பி வீட்டில் ( நியூ ஜெர்சி ) தினமும் சென்று விடுவார். நானும் வெள்ளி, சனி இரவு நண்பர் வீட்டில் இருப்பேன். ஞாயிறு ஐந்து மணிக்கு ஜே.எப்.கே. ஏர்போர்ட்டில் இருப்பேன்.

செவ்வாய் அதிகாலை பெங்களூரு வந்தடைவோம்.

திரும்பி வரும் போது, ஒன்றும் கொண்டு வர இயலாது. எப்பவும் போல சாகலேட்ஸ் தான். லேப்டாப் ஒன்று வாங்கி வர / கொண்டு வர நண்பர் ஒருவர் சொன்னார், முடியாது. ஒன்று தான் அலவ்டு.

***

தம்பியின் பியான்செவை சந்திக்கும் சான்ஸ் கிடைக்கலாம்! ஏற்கனவே எழுதியுள்ளேன்.

***

யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஒரு லிங்க் கொடுத்தார். அதில் சில தமிழ் டாகுமன்ட்ஸ் ( கதைகள், கட்டுரைகள்) உள்ளன.

Tuesday, September 8, 2009

பத்தாயிரம் வாசகர் பார்வைகள்

பத்தாயிரம் வாசகர் பார்வைகள் வரப்போகுது! நண்பர் விஜயஷங்கர் சொல்லி விளையாட்டாக இந்த வலைப்பூ ஆரம்பித்தேன். இப்போது நிறைய பேர் படிக்கிறார்கள். எழுதுவதற்கு ( என் தாய்மொழி இல்லாவிட்டாலும் ) நிறைய விசயம் உண்டு இங்கு. இன்னொரு நண்பர் சுந்தரவடிவேலுவும் அவர் ஊக்கம் கொடுத்து எழுத வைக்கிறார்!

ஒரு புதுவை பதிவர், என் மனதை புண் படுத்தியமாதிரிஇருந்தது. அவரும் மன்னிப்பு மெயில் போட்டுள்ளார். தேங்க்ஸ். மறப்போம் மன்னிப்போம்.

***

நூற்றி முப்பது பதிவுகளில், ஒரே ஒரு கதை, அதுவும் சொதப்பல். அதோடு நின்றது கதை எழுத்துப்பயணம். ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினேன். பரிதாபம்!

கவிதை இன்னொன்று இங்கே...

பத்தாயிரம் பார்வைகள் வந்தன
பரவசம் அடைந்தேன்
நிலாச்சோறு கிடைக்குமா என்றிருந்தேன்
பவுர்ணமி வந்தது
அம்மா இல்லாத ஏக்கம்
பாசம் கிடைக்காது துக்கம்
வருகிறாள் புது மனைவி!

அப்புறம் இந்த மாதிரி ( அதிஷாவின் கவிதை ) எனக்கு வராது!

நீல நிற இரவுகளில்!

***

நான் படித்த கோவை கல்லூரி நண்பர்கள் ( முற்றிலும் சீனியர்கள் ) ட்விட்டரில் இருக்கிறார்கள்... வெண்பா, அது இது என்று தூள் கிளப்புறாங்கையா! நானும் தான் ட்விட்டர் பண்ணுறேன்.

***

வேலை விசயமாக இந்த வார கடைசியில் நியூ யார்க் பயணம் - ஒரு வாரம் - ஒரு வால் ஸ்ட்ரீட் கம்பனிக்கு சாப்ட்வேர் வேலை இருக்கு. நாளை அமெரிக்கன் விசா வாங்க சென்னை செல்கிறேன். பயம் தகிடதோம் போடுது. சுவையின் ப்ளு வேறே ஆட்டம் காட்டுது!

அப்துல்லா அண்ணன் பதிவில் பார்த்த விஷயம் மனதில் கொண்டு மேலும் வினிதாவின் பதிவில் கண்ட விஷயங்கள் மனதில் கொண்டு, தயார் செய்து வேண்டுகிறேன்.

காசே தான் கடவுளடா

All about USA visa

கடைசியில் எங்கள் கம்பெனிக்கு நல்லது நடந்தால் சரி.

எனக்கும் தான்! :-)

Monday, September 7, 2009

குரு சில கேள்விகள்

ஸ்வாமி ஓம்காரின் ஸ்ரீ சக்ர புரி தொடர் படித்து திருவண்ணாமலை மகிமை பற்றி தெரிந்துக்கொண்டேன்.

"ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15"

அருமையான தொடர். படிக்க ஆவலை தூண்டிய தொடர். மிக்க நன்றி. என்னை போன்ற அக்னாஸ்டிக் ( புரிந்து தெளிந்து தேடுகிறேன் ) ஆட்களுக்கு சில விளக்கம் அளித்த அத்தொடர்.

எனக்கு சில கேள்விகள் உண்டு.

* குரு என்பவர் யார்?
* குரு கொடுக்கும் ஞானத்திற்கு ( கோர்ஸ் ) விலை வைக்கலாமா?
* குரு என்பவர் மாய வித்தை செய்ய முடியுமா?
* குரு என்பவர் மெஸ்அய்யா தான் கேள்விப்பட்டுள்ளேன். கடவுளிடம் ( மேம்பட்ட சக்தியை ) சொல்லி வரம் அருள வழி செய்பவரா?
* குரு உலகத்தின் பஞ்சத்தை போக்க முடியுமா?
* குரு என்பவர் கல்ட் சிஸ்டம் பரப்பலாமா ( மக்கள் ஹிப்னாடைஸ் ஆகிறார்கள் )
* குரு என்பவர் விளம்பரம் செய்யலாமா? ( பத்திரிக்கை, டிவி.)
* குரு என்பவர் தன குடும்பத்தை ஏன் வாரிசாக நியமித்து விஷயங்கள் பரப்ப வேண்டும்?