Tuesday, November 24, 2009

ராசிக்கல்

ஜெம்ஸ் ராசி கல் மோதிரம் அணிய சொல்கிறார் ஒருவர் - கேரளா நண்பர். ஜோதிடரை பார்த்து ஒரு மோதிரத்திற்கு ரூபாய் ஐந்தாயிரம் செலவு ஆகுமாம். பணம் நிறைய கிடைக்குமாம். ரிடர்ன்ஸ் அதிகம் என்றார்! ( இடது கையிலும் அணிந்துள்ளார், இயற்கை உபாதைகள் கழுவ என்ன செய்வார்? கழட்ட வேண்டுமா? கேட்கவில்லை! )

சரி ராசி கற்கள் பற்றி ஸ்வாமி ஓம்கார் பதிவை படித்தேன். நன்றி!

சூப்பர் பதிவு! ராசிக்கல் மோதிரம் வேண்டாம் என் முடிவு எடுத்தேன். வாங்குறவர்கள் வாங்கிக்கொள்ளட்டும்! ஆட்சேபனை லேது.

கையில் ஒரு தங்க மோதிரம் - நான் என் முதல் சம்பளம் கொண்டு சென்று கொடுத்த பொது - அம்மா ஆசையாய் வாங்கி கொடுத்தது மட்டும் அணிகிறேன்.

வேறு மதத்தவரும் இந்த ராசி கல் மோதிரம் குறித்து அபிலாசை வைத்துள்ளனர்!

வினிதா அவர்களின் இந்த ஆங்கில பதிவில் ராசிக்கல் மோதிரம் கொடுத்து ஏமாற்றிய பெங்களூர் ஜோதிடர் ஒருவர் பற்றி எழுதியிருக்கிறார்! ஜாக்கிரதை!

Monday, November 23, 2009

படமே கதை சொல்லுது


என்ன தண்ணீர் பிரச்சனை!

கொஞ்சம் எல்லோரும் தண்ணீரை பார்த்து செலவு செய்யுங்கள்.

Thursday, November 19, 2009

அரவாணிகளுக்கு துணை ( கல்யாணம் )

லிவிங் ஸ்மைல் வித்யா எழுதுறாங்க...

"திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்"

***

துணை தேவை தான். அதற்கு உங்கள் அரவாணி சமூகம் வழி செய்ய வேண்டும். உங்கள் புத்தகத்தில் எழுதியது போல, பிச்சை ( கடை எடுப்பது? ) நிறுத்தி, அரசாங்கம் மூலம், வேலை பெற போராடலாம்!

நியூ யார்க்கில் நான் பார்த்த குயர்கள் (?) ( ஓரினம் சேர்கை ஆட்கள் - சிலர் தங்களை பெண்களாகவே பாவிக்கிறார்கள் ) ஒருவரிடம் பேசினேன். இந்தியாவில் திரட் செக்ஸ் என்று இருகிரார்கலாமே என்று கேட்டார். அவர்களும், எங்களை போல துணை தேடினால் நன்று என்றார். அதாவது ஒரு ஆண் இன்னொரு ஆணை தேடுவதை போல, என்று பொருள் படும்படி - இங்கு ஆண் உடம்பில் இருக்கும் பெண் எனகொள்ளலாம்.

அரவாணி பிசியாலஜி எப்படி உறவுக்கு துணை புரியும்? அதற்கு தனி ஆபரேசன் செய்ய வேண்டாமா?

என்ன ஆச்சு?

ரொம்ப நாளா பதிவு எழுதாதற்கு மன்னிக்கணும். கொஞ்சம் வேலை பிசி. குடும்பத்தில் பிசி.

டைம் ட்ரேவல் வந்தால் தான் நல்லதாக இருக்கும்!

நேத்துதான் ஆஃப் அடிச்சேன் மச்சி; இன்னும் ஹாங் ஓவர் போகலே என்று சொல்லும் நண்பர்கள் இருக்கும் தேசத்தில் இருப்பதால்...

***

இரண்டு முறை நியூ யார்க் சென்று வரும் வேலை - வாய்ப்பு. பிறகு விரிவாக எழுதுகிறேன். கசமுசா எல்லாம் இல்லை.

ப்ராஜக்ட் சக்சஸ் தான். வேலை ஆரம்பம்! பெங்களூரில் இருக்கும் டீம் போதும். இன்னும் சிலர் நியூ யார்க் பயணிக்க ஆயுத்தம்! நானும் மூட்டையை கட்டிக்கொண்டு நியூ ஜெர்சியில் செட்டில் ஆக வேண்டியது தான். ஒரு வருடம் மட்டும் தான். பார்ப்போம்.

***

புல் பார்மில் எழுதுறாங்க தமிழ் ப்ளாகர்ஸ். அதனால் என் கிறுக்கல்கள் அப்படி இடமில்லாமல் ஒரு ஓரமாக இருப்பது போல இருக்கும்.


***

நண்பர் விஜயஷங்கர் எழுதிய கவிதை - அவசரகதி - அலை பாய்ந்தது என் எண்ணத்தில்!

ஒரு வித்தியாச சிறுகதை இங்கே - டிஸ்லெக்சியா - நன்றாக எழுதியிருக்கிறார் வினிதா.

***

இங்கு ஆங்கிலத்தில் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் முடியவில்லை. இன்னொரு ப்ளாக் தான் ஆரம்பிக்கணும்.

Thursday, October 15, 2009

Tuesday, September 29, 2009

வரம் பற்றிய ஒரு விளக்கம்

இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு! ஒன்பது மாதங்களில்... பதிமூன்றாயிரம் வாசகர் பார்வைகள்... நன்றி நன்றி...

வரம் பற்றிய ஒரு விளக்கம் ... இதோ...

வரம் ... என் முந்தைய போஸ்டில் கூறியிருந்த செய்தியை படித்திருப்பீர்கள்!

ஸ்வாமி ஓம்காரும் அருமையான ஒரு பதிவு போட்டுள்ளார்!

நானும் வரம் தரப்போகிறேன்...!

படித்து ரசியுங்கள்!

***

நான் தினம் கேட்கும் வரம்... ( எந்த சாமியாரிடம் கேட்டாலும்... இதை தான் கேட்பேன்! )

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -

அதற்கு விளக்கம்... எப்போதும் ஆரோக்கியமாக இருந்தால், நல்ல வேலை ( சொந்தமோ, அடிமை தொழிலோ செய்யலாம்! ) அப்புறம் கை / பேங்க் அக்கவுண்ட் நிறைய பணம், ஒரு மனதிற்கு பிடித்த வீடு... அப்படியே குடும்பமும் ( சொந்தம், மற்றும் வருகிறவள்.. வருகிறவன்...) நன்றாக இருக்கும்... எப்போதும் சந்தோஷம் நிலவும்!

அதிக ஆசை இல்லை! :-)

பிளாசிபோ எப்பக்ட் படியும் பார்த்தால், நம் முயற்சியே வெற்றியை அமைத்துக்கொடுக்கும்! நாம் அதை அடைவோம் என்று முன்னிறுத்திக்கொள்ள வேண்டும்!

***

சென்ற வாரம் வெள்ளி முதல் திங்கள் இரவு வரை ஊரில் கழித்தேன். மீண்டும் வியாழன் இரவு ஊருக்கு சென்று செவ்வாய் காலை திரும்ப வேண்டும். திங்களன்று சென்னை கன்சலேடில் ஒரு சிறு வேலை!

அப்போது கோவிலில் ஒரு சிறு விசேஷம்.... குடும்பம் மட்டும்! இன்னும் இருபது நாட்களில் மீண்டும் நியூ யார்க் செல்லும் வேலை இருக்கு. ஒரு வருடம் இருக்க வேண்டி வரும்.

அதனால் நிறைய எழுத முடியாது!

வரம்

ஒரு இணையத்தில் பிரபலமான எழுத்தாளர் ஒரு சாமியார் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் எனக்கு தெரிந்துவிட்டது - ஒரு புத்தகம் மொழிபெயர்ப்பில் அல்லது அனுபவத்தில் வரும் என்று. கடவுள் என்பவர் ஏன் ஜிலேபி பையித்யமாக இருக்க வேண்டும்? எங்கள் வீட்டிற்கு சில சமயம் வந்த போது ( அப்பா போலீசில் இருந்தவர் ) கேட்டு சாப்பிட்ட ஒரு பலகாரம்! சுவாமியும் சமாதி நிலையும் அப்படிதானா?

அரசியல்வாதிகளுக்கும் சாமியார்களுக்கும் உள்ள லிங்க் உங்களுக்கு தெரிந்திருக்கும். நல்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் அந்த ஆசிரம ஏரியாவில் நடக்கும். தங்கம் மற்றும் கணக்கில் டேக்ஸ் கட்டாமல் இருக்கும் பணம் புரளும் ( எல்லாம் பக்தர்கள் கொடுத்தது என்று - அதை மீண்டும் அந்த அரசியல்வாதியின் குடும்பத்திற்கு வெள்ளையாக சென்று சேரும் ) - உதாரணம் - திருமலைகோடி தங்க கோவில்.

ஒருவர் தனக்கு தானே சிலை வடித்துக்கொண்டு, மற்றவர்களை கும்பிட வைப்பது என்ன சூத்திர தர்மம்? மாயாவதியும் அதை தானே செய்தார்? குருக்களிலெல்லாம் குரு தக்ஷிணாமூர்த்தி சொன்னது - உயிருள்ளவர்களை சிலை வடித்து கும்பிடாதே! என்னை பொறுத்தவரை அவர்கள் நார்ஷிஷிச்டிக் சைகொபாத்ஸ்.

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். இதை சொல்லியவர், தெய்வத்திற்கு முன்னால் குரு என்பதை - சாமியார்கள் துஷ்ப்ரயோகம் செய்வார்கள் என தெரிந்திருக்காது!

நீங்கள் வேதாத்ரி மகரிஷி சொல்லிக்கொடுத்த குண்டலினி யோகம் பற்றி படியுங்கள், பிடடியில் நடப்பது அதன் ஒரு பாகமே! சரி சாமியாருக்கு எதற்கு பட்டு மெத்தையும், பெரிய பங்களாவும்?

மேலும் வரம் நிகழ்ந்தது என்பது - அற்புதங்களை பரப்பும் ஒரு மாய கட்டுவித்தையே. ஒரு டேடாபேஸ் வைத்து, கேட்ட வரம், நடந்தது என்ன எனபதை விலா வாரியாக யாரும் சொல்ல இயலாது! பைசா இல்லாமல் இந்த உலகில் ஒரு சுண்டைக்காயும் இல்லை, புண்ணாக்கும் இல்லை!

இதையும் படியுங்கள் நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்...!

என் தம்பியும் மூன்று வருடங்களாக அந்த சாமியாரிடம் சென்று வரம் கேட்கிறான். திருவண்ணாமலை அல்லது பெங்களூரு - பிடடி வந்து செல்ல காசு தான் செலவு. அவர் இஷ்டப்பட்ட மாதிரி வெளி நாட்டு வேலை வரவில்லை... இன்னும் பிற!

ஒன்று தெரியுமா தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்பவனே தெய்வம்! ஏன்? எந்த மனித பிறவியும் தன தவறை, ஒப்புக்கொண்டதில்லை. ரீசன் இருக்கும்!

சரி வரம் கேட்கும் சூட்சமம் ஒன்று சொல்லட்டுமா?

என் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவ வேண்டும். அதற்கு தேவையான ஆரோக்கியம், நிரந்தர தொழில் மற்றும் அழகான ஒரு சொந்த வீடு வேண்டும்!

- இதை தான் என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்து, தினம் எனது பிரேயரில் நான் கேட்பது -